Monday, 20 April 2020

''என் தலையில் குண்டு விழுந்தாலும், நான் சென்னையை விட்டு ......" - பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி
 1942 - இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியமான ஒரு மைல்கல், இது.
இந்த ஆண்டில்தான் வெள்ளையனே வெளியேறு! ?' என்ற போராட்டத்தை மகாத்மா காந்தி தொடங்கினார்.
இந்தியா முழுவதுமே,காஷ்மீர் முதல் கன்னியா குமரிவரை சுதந்திர தாகத்தில் கிளர்ந்து எழுந்ததை உலகமே கண்டு வியந்தது.
அதே 1942-ம் ஆண்டு எங்கள் - வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஓர் ஆண்டு ஆகும்.
 அப்பொழுது நங்கள், எங்கள் தாயார், நான், எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் மனைவி, என் மனைவி, 3 குழந்தைகள் ஆகியோர் சென்னையில் வசித்து வந்தோம். 
உலகப் போர் உச்சக் கட்டத்தில் இருந்தது. ஜப்பான் படை சிங்கப்பூர் வரை வந்துவிட்டது.
எந்த நேரத்திலும் சென்னையில் குண்டுகள் விழும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சென்னையில்  ஒரே பீதி..!
நகரம்  காலியாகிக் கொண்டு இருந்தது.
குடும்பம் குடும்பமாக  கூட்டம் கூட்டமாக வீடுகளை காலி செய்து கொண்டு சொந்த ஊர்களுக்குப் போய்க்கொண்டு இருந்தார்கள்.
நாங்களும் கூட போகலாம் என்று நினைத்தோம். ஆனால், எங்களுக்குக் கேரளாவில் யாரும் இல்லை, - சென்னையில் எங்களுக்கு வேலையும் இல்லை, ஸ்டூடியோக்கள் எல்லாம் காலி. குண்டுக்குப் பயந்து நடிகர்-நடிகைகள் - சொந்த ஊர்களுக்குப் போய்விட்டார்கள். படப்பிடிப்பே இல்லை. நாங்கள் சும்மா இருந்தோம்.
 இந்த நிலையில் ஒரு நாள், சென்னையில் குண்டு விழுந்துவிட்டது என்று பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது.
இனியும் நாங்கள் சென்னையில் இருப்பது நல்லது அல்ல என்று எங்கள் தாயார் கருதினார்கள்.
அதே நேரம், ''எங்கள் வீட்டுக்கு வந்துவிடுங்கள்என்று போத்தனூர்ரில் இருந்து கிருஷ்ண நாயர் கடிதம் எழுதியிருந் தார்.
இவர் என் சட்டகர். என் மனைவியின் அக்காளின் கணவர். போத்தனுாரில் ரெயில்வேயில் வேலை செய்தார்.  நெருங்கிய உறவு இருந்தும், அவரது விட்டுக்குப் போக  நாங்கள் தயங்கினோம், ஏனென்றால், என் மனைவியின் அக்காள் இறந்துவிட்டார்.
கிருஷ்ண நாயர் மறுமணம் செய்து கொண்டார். அவருக்குக் குழந்தைகளும் இருக்கிறார்கள். சாதாரணக் குடும்பம் தான். தொழில் இல்லாததால், அப்பொழுது எங்கள் கையிலும் வசதியில்லை. எனவே,போத்தனூரர் போக நாங்கள் தயங்கினோம், - ஆனால், கிருஷ்ண நாயருக்கு நாங்கள் நிறைய உதவிகள் செய்து இருக்கிறோம். அவரே, எங்களை அழைத்தார். நாங்களும் எப்படியாவது சென்னையை விட்டுப் போயாக வேண்டும்.
 இதையெல்லாம் மனதில் கொண்டு, வீட்டை காலி செய்து கொண்டு, போத்தனுாருக்குப் போகத் தீர்மானித்தோம்.  எங்களுக்குப் பெருந்துணையாக இருந்த வேல்நாயர், எங்களுடன்  வர மறுத்து விட்டார். ''என் தலையில் குண்டு விழுந்தாலும், நான் சென்னையை விட்டு நகர மாட்டேன்" என்று  அவர் சொல்லிவிட்டார் 
ங்கள் அம்மா,நான்,எம்.ஜி.ஆர்., எம்.ஜி.ஆரின் மனைவி, என் முதல் மனைவி, 3 குழந்தைகள் ஆகியோர் ரெயில் மூலம் போத்தனுார் போய்ச் சேர்ந்தோம்.
ரெயில்வே காலனியில் கிருஷ்ண நாயரின் ரின் வீடு, அந்த வீட்டில் அவருடைய விருந்தாளியாக நாங்கள் தங்கினோம்
அன்புடனும், ஆதரவுடனும்  அவர் எங்களை கவனித்துக் கொண்டார்.
என் முதல் மனைவியின்  பெயர் தங்கம்மா. தங்கம்மாவுக்கு ஏற்கனவே காசநோய் (டி.பி.) இருந்த போத்தனார் போனதும் அது அதிகம் ஆயிற்று, ஆகவே  கோவையில் உள்ள  அரசாங்க ஆஸ்பத்திரியில் தங்கம்மாவை சேர்த்தோம்.


 எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் எழுதிய "இந்த நிலையை மாற்றி அமைப்போம் !" ராணி இதழில் இருந்து ஒரு பகுதி Friday, 17 April 2020

கனவு பலித்தது - புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்
ஒருவன் அறிவாளியாகவோ தியாகியாகவோ வளர்வதற்கு அவன் வளர்க்கப்படும் தன்மையும், சூழ் நிலையும், சுற்றுச் சார்புமே காரணம் என்பது எனது கருத்து இந்த கருத்தினை ஒரு படத்தில் வெளியிட வேண்டு மென்று சில ஆண்டுகளுக்கு முன்பே கனவு கண்டேன் வெளி நாட்டு படங்கள் போல் காட்சியமைப்பிலும், இயற்கை காட்சிகள் நிறைந்த வெளிப்புற சூழ் நிலையிலும் படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு எழுந்தது. "அடிமைப் பெண்" கதையை அமைக்கும் போதே இப்படியெல்லாம் காட்சிகள் உருவாக வேண்டுமென்ற குறிக்கோள் வைத்தே கதை பின்னப்பட்டது.
விபரம் தெரியாத ஒரு ஆண் மகன் உலகம் புரிந்தவனாவவும் பகுத்தறிவு நிறைந்தவனாகவும் மாற்ற முடியாது என்றால் எதிர்காலமே இல்லை. ஒரு வாலிப வயதுள்ள பெண் தானும் கெடாமல் வாலிப பருவத்திள்ள ஒரு ஆண் மகனையும் கெடுக்காமல் அவனை காப்பாற்றி லட்சிய மனிதனாக்க முயற்சித்து வெற்றிகான்கிறாள் என்பதே ''அடிமைப் பெண்ணின்' அடிப்படை கருத்து.
 அன்பின் வழியால் தாய் பாசத்தோடு பகுத்தறிவுள்ள ஒரு பெண்ணால் வளர்க்கப்பட்டால் எந்தவொரு மனிதனும் தியாகியாகவும், வீரனாகவும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு உள்ள தொண்டனாகவும் ஆக முடியும் இது தான் இதில் வரும் கதாநாயகனின் பாத்திர அமைப்பு.
பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை, பேராசை ஆகிய தீயகுணங்களுக்கு நடுவே தாயன்பு, தொண்டுள்ளம், தியாக உணர்வு இவற்றிற்கு ஏற்படும் வெற்றியை விளக்குவதான் 'அடிமைப் பெண்ணின்' கதை.
என் சக்திக்கு, என்னுடைய சூழ் நிலைக்கேற்ப ஒரு நல்ல காரியத்தை என் கலைத்தொழிலில் செய்திருக்கிறேன் என்ற மன திருப்தி எனக்கு நிச்சயமாக ''அடிமைப் பெண்' படத்தில் உண்டு. என் கனவு பலித்தது, அந்த கனவின் சிறப்பை நான் சொல்வது சரியல்ல, படத்தை பார்த்து முடிவு செய்பவர்களுடைய எண்ணத்திற்கு வேலிபோட நான் தயாராக இல்லை.

Wednesday, 15 April 2020

"என் ரதத்தின் ரத்தமே" - புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்

எனது ரத்தத்தின் ரத்தமான
உடன் பிறப்புக்களே!

எவ்வளவு பெரிய அறிவாளியாக திறமைசாலியாக இருந்தாலும் ஒரு தனி மனிதனால் மட்டும் எதையும் சாதித்துவிட முடியாது.
உங்களை போன்ற கோடிக்கணக்கான மக்கள் ஒத்துழைக்க முன் வந்தால் தான் நல்லவைகளைச் செயல்படுத்த முடியும். நல்லவை என்றும் குறிப்பிட்ட ஒரு தனி மனிதனுக்கு மட்டும் சொந்தமல்ல; அந்தக் கொள்கையை ஏற்றுக் கொன்டுள்ள அனைத்தவர்களுக்கும் சொந்தமாகும். அப்படியானால் அந்த அனைவரில் யார் வேண்டுமானாலும் தலைமை ஏற்று நல்ல காரியத்தை நல்லவர்களின் துணையோடு நிறைவேற்ற முடியும்.
எனவே நமது கொள்கையாகிய "அண்ணாயிசத்தைப் பரப்புங்கள், அனைவரும் அதைப் புரிந்து கொள்ளும்படி செய்யுங்கள்.
அண்ணாவின் பண்புள்ள வழித் தோன்றல்களான தொண்டர்கள் படித்த இளைஞர்களையும் தங்களைப்போல் நாட்டினை மேம்படுத்த முன் வரும்படி செய்யவேண்டும்.அண்ணாவின் கொள்கைகளை நிறைவேற்றுவதை விட அண்ணாவின் புகழைக்காக்க வேறு வழியே கிடையாது. அண்ணாயிசத்தை ஏற்றுக் கொள்கின்றவர்கள்;அதற்கு இழுக்கு ஏற்படாமல் செயல்பட்டவர்கள் செயல்படுகின்றவர்கள் அண்ணா தி.மு..வில் சேர்வதால் அண்ணா வின் கொள்கைக்கு வலு ஏறும்.
ஆனால் அவர்களின் கை கறைபடாத கையாக இருக்க வேண்டும்.
தியாகத்திற்கு விலை மதிப்பு கிடையாது. தியாகம் தன் வாழ்வுக்காகச் செய்வதல்ல; பிறர் வாழ்வதற்காகச் செய்வது.
இன்றைய அண்ணா.தி.மு.. தொண்டர்கள் செய்யும் தியாகங்கள் தமிழகத்தின் எதிர்காலத்தை ஒளி மயமாக்குவதற்காக அந்த ஒளிக்கதிர் இந்திய துணைக்கண்டம் எங்கணும் பரவி, அனைத்துலகிலும் நல்ல பயிர்கள் (கொள்கைகள்) வள, உதவி செய்வதாகும்.
 எனவே நம்முடைய அண்ணாவின் கொள்கையின் அறவழியில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் நன்மை பயக்கவேயாம்.

                                                                          அன்பன்
எம்.ஜி.ராமச்சந்திரன்

Monday, 13 April 2020

அரசகட்டளையில் " நான் ஒரு குறும்புக்காரி " ! - முன்னாள் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள்


'அரசகட்டளை' படம் பற்றி, ஆரம்ப நாட்களில் செய்தித் தாள்களிலே வந்த செய்திகளை நீங்கள் பார்த்திருக்கலாம்.
அவைகளில் எல்லாம் சரோஜா தேவியும், சந்திரகாந்தாவும் மட்டுமே நடிப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்திருக்கும்; நானும் உங்களில் ஒருத்தியாக அந்த செய்தியைப் படித்துக் கொண்டிருந்தவள் தான்.
நாளடைவில் அந்த செய்திகளில் சரோஜாதேவி, சந்திரகாந்தா ஆகியவர்களின் பெயர்களோடு என் பெயரும் சேர்க்கப்படும் என்று நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.
என்னுடைய இந்த நினைவு, நிறைவேறவும் செய்தது.
ஒருநாள் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்திக்க நேர்ந்தது.
"சத்தியராஜாவின் 'அரசகட்டளை' படத்தில் உனக்கும் ஒரு வேடம் வாங்கித் தருகிறேன்; நடிக்கிறாயா?"- என்று கேட்டார் அவர்.
 "சரி" என்று சொல்லிவிட்டேன் நான்.
எப்போதுமே நான் ஒரு அவசரக்காரி. அவர் கேட்டவுடன் 'சரி' சொல்லி சம்மதம் தெரிவித்துவிட்ட பிறகுதான் மெல்ல மெல்ல எனக்கு ஒரு அச்சம் தோன்றியது.
எம்.ஜி.ஆர். அவர்களின் அண்ணன், எம்.ஜி.சக்ரபாணி அவர்கள் டைரக்ட் செய்யும் படம் அரசகட்டளை.
படத்துறையிலே பண்பட்ட அனுபவம் வாய்ந்தவர் அவர்; சிறந்த குணச்சித்திர நடிகர்.
அப்படிப்பட்டவரை திருப்தி செய்யத் தக்க நடிப்பாற்றல் நமக்கு உண்டா என்ற சந்தேகமே தோன்றி விட்டது எனக்கு.
ஏதாவது ஒரு வேடத்தை ஏற்று, எதிலும் சேராமல் நடித்து அவருடைய அதிருப்திக்கு ஆளாவது சரியில்லை அல்லவா? ஆகவே -
"என்ன வேடம் எனக்கு?" என்று கேட்டேன் எம்.ஜி. ஆரிடம்.
குறும்புக்காரப் பெண்ணொருத்தி வேடம்" என்றார் அவர்.
அவ்வளவுதான்; தலைகால் புரிய வில்லை எனக்கு; அவ்வளவு மகிழ்சி; ஏனென்றால், சின்ன வயது முதலே குறும்புக்காரி என்று பெயரெடுத்தவள் நான்.
குறும்பும் குதூகலமும்தான வாழ்க்கை என்று நினைப்பவள்.
அதாவது, கடினமானது, கனமானது கஷ்டமானது என்று பலபேரால் சொல்லப்படும் வாழ்க்கையானது, லேசானதாக மாற, இன்ப மயமாக ஆக குறும்புத்தனத் தோடு கூடிய பரபரப்பும் சுறு சுறுப்புமே சிறந்த அஸ்திவாரம் என்று எண்ணியிருப்பபவள் நான்.
இப்படிப்பட்ட நான், எனக்குக் கிடைக்கும் வேடம், குறும்புக்காரப் பெண்ணின் வேடம்தான் என்றால் விட்டுவிடுவேனா என்ன!
அரசகட்டளை'யில் அந்த வேடத்திலே நடிக்க, நான் எனது பூரண சம்மதத்தைத் தெரிவித்தேன், திருப்திகரமாக நடித்துவிட முடியும் என்கிற தைரியத்தோடு.
சின்ன வயதுச் சிங்காரி அவள்!
சீராட்டிப் பாராட்டிச் செல்வாக்கோடு வைத்திருக்க தாய் தந்தையற்றவள் அனாதை!
வறுமை அவளது உடன் பிறப்பு!
அன்போடும் ஆசையோடும் பேசிப்பழக அத்தான் ஒருவன் அவளுக்கு உண்டு!
அவளைப் போலவேதான் அவனும்  செல்வச் செழிப்பில்லாத குடும்பத்திலே பிறந்தவன்!
அவளுக்கு ஆதரவாயிருந்த அந்த அத்தானுக்குத் திடீரென்று மணிமுடி சூட்டப்படுகிறது; மன்னனாகிவிட்ட அத்தானைக் கண்டு மலைத்துப் போய்விடுகிறாள் அவள்.
தனக்கு மட்டுமே சொந்தமான அத்தான், நாட்டுக்குச் சொந்தமாகி தன்னை விட்டு எங்கேயோ விலகிச்சென்று கொண்டிருப்பதாக எண்ணிப் புலம்புகிறாள், அவள்.
இந்த, 'அவள்' வேடம் தான், 'அரசகட்டளை'யிலே என் வேடமாகும்!படப்பிடிப்பு துவங்கிய காலத்தில் - என் முன்னே 'பெரியவர்' (சக்ரபாணி) வந்து நின்றாலே எனக்கு நடுக்கம் ஆரம்பித்துவிடும்; இதற்குக் காரணம் பயம்தான் என்று நான் சொல்லமாட்டேன் ஏதோ அப்படி ஒரு மரியாதை உணர்வு!
வசனத்தைச் சொல்லிக்கொடுப்பார்கள்; அப்படியே மலைத்துப்போய் நிற்பேன் நான்!
என்னுடைய நிலையைப் புரிந்து கொண்டு இனிய முகத்துடன் பெரியவர் சொல்லுவார்.
இதுதாம்மா வசனம்; எங்கே...சொல்லு பார்க்கலாம். மறுபடியும் ஒருமுறை வசனம் சொல்லப்படும். துணிந்து சொல்லுவேன் நான்.
இவ்வாறாக, படப்பிடிப்பின் போதெல்லாம் என்னோடு இனிய முகத்துடன் பேசிப் பழகினார்கள் டைரக்டர் எம்.ஜி.சி. அவர்களும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர் களும்.
எம்.ஜி.ஆருடன் நான் நடிக்கவேண்டிய காட்சிகளில் எல்லாம், எம்.ஜி.ஆர். அவர்களே எனக்கு நடித்துக் காட்டி, என் நடிப்புக்கு மெருகூட்டியதை நான் மறக்கவே முடியாது.
இதனால் -----
சரளமாகப் பேசி நடித்து, அந்த குறும்புக்காரி வேடத்தை அவர்கள் எந்த அளவுக்கு எதிர்ப்பார்த்தார்களோ, அந்த அளவுக்குச் செய்திருக்கிறேன் நான்.  
இப்படி 'அரசகட்டளை'யில் நடித்த ஒவ்வொருவருமே  சத்தம் பங்கைச் சிறப்புடன் செய்து முடித்திருக்கிறோம்.
 சத்தியராஜாவின் 'அரச கட்டளை' ஒரு வெற்றிப் படமே என்று நிர்ணயிக்க இதுவே போதுமானது அல்லவா? மக்கள் திலகம் இதுவரை நடித்த படங்களுக் கெல்லாம் மகுடம் வைத்தாற்போல விளங்கப் போகிறது, அரச கட்டளை !அரசகட்டளை சிறப்பு மலர்
சமநீதி பத்திரிக்கை  

Sunday, 12 April 2020

நினைத்தோம் - முடித்தோம் ! - அரசகட்டளை பட தயாரிப்பாளர் எம்.சி.ராமமூர்த்திஅரசகட்டளை' பற்றி கட்டுரை கேட்டார், சமநீதியின் ஆசிரியர். என்ன எழுதுவது? சிந்தித்தேன். நடந்துபோன நிகழ்ச்சிகள்தான் நினைவுத் திரையில் தோன்றின.


சமூகச் சித்திரங்களே தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நேரமிது. அதே நேரத்தில், என் சிறிய தந்தையார் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்து வெற்றி முரசு கொட்டிய மர்மயோகி, மலைக்கள்ளன், அலிபாபா, நாடோடிமன்னன். ஆகிய படங்கள் என் நினைவுக்கு வந்தன.
மன்னன் உடையில் வீரச் செயல் புரியும் நிகழ்ச்சிகளுக்கு என்றுமே வரவேற்புண்டு என்று தோன்றியது. இப்படி ஒரு படம் இப்போது வந்தால்..?
ஒரு நாள் என் சிறிய தந்தையாருடன் உரையாடிக்கொண்டிருந்தேன்.
"ஏய், நீ ஒரு படம் எடு; கதையை முடிவு செய்!" என்றார்.
"நானா?" என்றேன். வியப்பு - திகைப்பு  - அச்சம்!
"உண்மைதான்!" என்றார். அஞ்சிய எனக்கு அவர் தந்தது துணிவு: ஊட்டியது ஊக்கம்!
அந்த அன்புக் கட்டளையிலே பிறந்தது தான் இந்த 'அரச கட்டளை'!
என் தந்தையாரே டைரக்டரானார்! வேலை துவங்கியது. இடையிலே எத்தனை எத்தனை தடைகள் -இடர்ப்பாடுகள் - தொல்லைகள் துன்பங்கள்!
அதன் காரணமாக நான் மனச்சோர்வுற்று வருந்தும் நேரத்தில் எல்லாம், என் தந்தையார், சிறிய தந்தையார், இருவரிடமிருந்தும் எனக்குக் கிடைத்த அறிவுரைகள் ஏராளம்! ஏராளம்!
படத்தை முடிக்க மட்டுமல்ல; என் வாழ்க்கையை நடத்த அந்தப் பெரும் பயணத்திலே வந்து போகும் இடர்ப்பாடு களைக் கடக்க -விரட்ட- வெற்றிகாண அந்த அறிவுரைகள் எனக்கு என்றும்பயன்படும்.உனக்கு விரக்தி ஏற்படக்கூடாது. அதுவும் இந்த வயதில் நிச்சயமாகக் கவலையே கூடாது. இன்றுதான் புதிதாகப் பிறந்தோம் என்று எண்ணிக்கொள். தொடர்ந்து கடமையைச் செய். 'மோப்பக் குழையும் அனிச்ச'மாக எப்போதுமே இருக்காதே!" இவை என் தந்தையார் எனக்கு அடிக்கடி கூறும் அறிவுரைகள் ஆகும்.
"சினத்தை அடக்கு! அறிவையும் உடலையும் நன்கு பேணி பாதுகாத்துக்கொள்! எவ்வளவு வேலை இருந்தாலும், உடற் பயிற்சியை மறந்து விடாதே! நிறையப்படி எழுது சிந்தனை செய்!" இவை சிறிய தந்தையார் எனக்களித்த பாடத்தின் ஒரு பகுதி.
நான் வணங்கி வழிபடும் பாட்டியும் இதையேதான் சொன்னார்கள்.
இந்த அறிவுரைகளை அன்புக் கட்டளைகளாக எற்று, அந்த வழியிலேயே நடக்கத் தொடங்கிவிட்டேன் நான்.
தவறு செய்யும் நேரத்தில், அதைச் சுட்டிக் காட்டி, திருத்தும் அமைதியான முறை அவருக்கே உரியது.
எனவே இவர்கள் இருவருமே எனது இரு கண்கள்! எனது எண்ணங்களுக்கும்,செயல்களுக்கும் உறுதுணையாயிருந்து வழிகாட்டி நடத்திச் செல்லும் ஒளிவிளக்குகள்!
இந்த மலையளவு துணையுடன் நான் ஈடுபட்ட இந்தப் பெரிய காரியம் நலமுற முடிய உறுதுணையாக இருந்த தொழல் நுணுக்கக் கலைஞர்களின் பேருதவியை என்றும் மறக்க முடியாது-அவர்கள் அனைவரூக்கும்  என் மரியாதை கலந்த நன்றிகள் - வணக்கங்கள்!
இந்த இரு கண்களின் துணைகொண்டு நான் இன்னும் பல பயணங்களிலே ஈடு படுவேன்; எவர் வரினும் அஞ்சேன்; நீல லேன்; தொடர்ந்து பணியாற்றுவேன்.
என்று  உறுதி கூறுகிறேன்.

அரசகட்டளை சிறப்பு மலர்
சமநீதி பத்திரிக்கை