Saturday, 4 April 2020

மறுநாள் திமுக வில் நாங்கள் எல்லாம் உறுப்பினர்கள் ஆனோம் || எம்.ஜி.சக்ரபாணி ||




பல நாடகங்களுக்கு அமரர் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமை வகித்திருக்கிறார்கள்.
பட்டிவீரன்பட்டியிலே எங்கள் "இன்பக் கனவு" நாடகம் நடந்தது. அதற்கும் தலைமை வகித்தவர் அமரர் அண்ணா அவர்கள்.
அண்ணா தலைமையுரை ஆற்றுவதற்கு முன்னால் பழம்பெரும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த பொன்னம்பலனார் பேசினார். அவர் பேசும்போது "எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்ற கழகத்திற்காகப் பலவிதங்களில் நிதி உதவி செய்து வருபவர். எப்போது கேட்டாலும் இல்லை என்னாது அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டு இருப்பவர். இப்படிப்பட்ட குணநலன்களை உடையவர் இதுவரை திராவிட முன்னேற்றக் கழகத்தில் அங்கத்தினர் அல்ல என்பதையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
அந்த நாடகம் முடிந்து சென்னைக்கு வந்து மறுநாள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் நாங்கள் எல்லாம் உறுப்பினர்கள் ஆனோம்.
"என் தம்பி எம்.ஜி.ஆர்" - எம்.ஜி.சக்ரபாணி அவர்கள்

1978 (ராணி பத்திரிகையில் )

No comments:

Post a comment